நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் அனைவரும் மொழுகுவர்த்திகள் ஏந்தி கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர உறுப்பினர் வ.பார்த்திபன், வடமராட்சி அமைப்பாளர் சித்திராதரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலர் செ.கஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.
0 comments:
Post a Comment