மதுபானப் போத்தல்களுடன் மட்டு.வாசி கைது

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பு பகுதியில் நடத்தப்பட்ட  திடீர் சுற்றி வளைப்பில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ஒருதொகை மதபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வீடொன்றை,  மதுவரி திணைக்கள அதிகாரிகள் நேற்று மாலை சுற்றிவளைதத்தபோது, 180 மில்லிலீற்றர் கொள்ளவு கொண்ட 300 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தயாளேஸ்வரகுமார் தெரிவித்தார்.

50 போத்தல்கள் கொண்ட, 6 பெரிய பெட்டிகளில் அடைத்து வைக்கட்ட நிலையில் இவை கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment