நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற துன்பியல் சம்பவத்திற்கான அடிப்படைக் காரணிகள் மற்றும் பின்னணியை கண்டறிவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலர் உதய ஆர் செனவிரத்னவினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் உள்ளிட்ட சிறப்புக் குழுவொன்றே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment