உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

ஐசிசி ஒருநாள் ”உலகக் கோப்பை - 2019”  இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. 

இந்தப் போட்டி மே 30 முதல் ஜூலை 14-ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் அறிவித்தது பிசிசிஐ. 

2015 உலகக் கோப்பையில் இடம்பெற்ற தோனி, தவன், ஜடேஜா, விராட் கோலி, புவனேஸ்வர் குமார், முஹமது ஷமி, ரோஹித் சர்மா ஆகிய 7 வீரர்களுக்கு இம்முறையும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இரு தமிழ்நாட்டு வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்த இந்திய அணியில் இடம்பெறாத ரிஷப் பந்த், ராயுடு, வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி ஆகிய மூன்று வீரர்களும் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். 

முதலில் அறிவிக்கப்பட்ட 15 பேரில் யாருக்காவது காயம் ஏற்பட்டால், இந்த மூவரிலிருந்து ஒருவர் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment