இளம்பெண்ணை மிரட்டி இரு ஆண்டுகாலம் அடிமையாக நடத்திய பெண்ணுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பிரபலமான Nxivm பாலியல் வழிபாட்டு குழுவின் முக்கிய உறுப்பினரே இந்த விவகாரத்தில் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
Nxivm பாலியல் வழிபாட்டு குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் 42 வயதான லாரன் என்பவர்.
இவரே மெக்ஸிகோ நாட்டவரான இளம்பெண் ஒருவரைக் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரைத் தமது தனிப்பட்ட அடிமையாக நடத்தி வந்துள்ளார்.
நியூயோர்க் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அவரை அடைத்து வைத்திருந்ததாகவும், தமது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் ப்ரூக்ளின் ஃபெடரல் நீதிமன்ற விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
இவர்மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Nxivm பாலியல் வழிபாட்டு குழுவானது அதன் தலைவரான கீத் ரெயினர் என்பவரை கைது செய்தபோது ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது.
மெக்ஸிகோ நாட்டிலிருந்து இளம்பெண்களை சட்டவிரோதமாக அழைத்துவந்து பாலியல் அடிமைகளாக நடத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தொலைக்காட்சி நடிகை உள்ளிட்ட அறுவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment