வாக்குப் பதிவை பாதிக்குமா வெப்பம் சந்தேகிக்கும் - தேர்தல் அதிகாரி

கடுமையான வெப்பம் காரணமாக அடுத்த 4 மணி நேரத்துக்கு இந்த அளவுக்கு வாக்குகள் பதிவாகுமா என்பது சந்தேகம் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா 

இதுவரையில் அதிகபட்சமாக ஆரணியில் 36.51% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 22.08% வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

காலை 11 மணி வரை 30 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது வரவேற்கத்தக்கதாகவே உள்ளது. இது அடுத்த இரண்டு அல்லது 4 மணி நேரத்துக்கு நீடித்தால் கூட மிகப்பெரிய அளவில் வாக்குச் சதவீதம் பதிவாகும். 

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட 305 வாக்குப் பதிவு இயந்திரங்கள் உடனடியாக மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. 

ஆனால் கடுமையான வெப்பம் காரணமாக அடுத்த 4 மணி நேரத்துக்கு இந்த அளவுக்கு வாக்குகள் பதிவாகுமா என்பது சந்தேகம். 

தமிழகத்தின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் இடைத்தேர்தல் இன்று காலை ஆரம்பித்து இடம்பெற்று வருகிறது.

பல வாக்குச்சாவடிகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல்  வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

கடந்த 4 மணி நேரத்தில் அதாவது 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மதுரையில் 25.41% வாக்குகள் வாக்குகளும், தென் சென்னையில்  - 23.87% வாக்குகளும், வட சென்னையில் - 23.36% வாக்குகளும், மத்திய சென்னையில் - 22.08% வாக்குகளும், பதிவாகியுள்ளன-என்றார்.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment