ட்ரோன் மூலம் மருத்துவமனைக்கு சிறுநீரக உறுப்புக் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்டிமோர் சிட்டியில் 44 வயது பெண்மணி ஒருவர் 8 வருடமாக டயாலிஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.
இதனால் அவருக்கு சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், சிறுநீரகம் மேற்கு பால்டிமோர் சிட்டியிலிருந்து 31.5 மைல் தூரம் வரவேண்டி இருந்தது. அதைக் கொண்டுவர முதல்முறையாக மருத்துவர்கள் ட்ரோன்னை பயன்படுத்தியிருந்தனர்.
இதற்குத் தகுந்தவாறு மருத்துவமனையுடன் சேர்ந்து மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவர்கள் திட்டமிட்டனர்.
முன்பதாகவே ட்ரோனை பயன்படுத்தி இரத்தம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்பி வைத்து சோதனை மேற்கொண்டனர். இதன் பின்னரே சிறுநீரகத்தைக் கொண்டு சென்றுள்ளனர்.
ட்ரோன் மேற்கு பால்டிமோர் சிட்டியில் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு இடையேயான சில மைல்களை வெற்றிகரமாகக் கடந்து சிறுநீரக உறுப்பை கொண்டு சேர்த்தது.
” உடல் உறுப்புகளை இப்போது கொண்டு செல்லும் முறையை மாற்றியமைப்பதற்கு இது ஒரு முக்கிய படியாக அமைந்துள்ளது. இந்த முறை அமுலுக்கு வந்தால், நிறைய மக்கள் பயன் பெறுவார்கள். அமுலுக்கு வருவதற்கு இன்னும் பல காலங்கள் ஆகலாம். ஆனால், அதற்கு இதுதான் முதல்படி ஆகும் " என அந்தப் பெண்மணிக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் ஜோசப் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment