இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஒமந்தைப் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மோதலில் மேலும் காயமடைந்த இருவர் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவரே கைது செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் முற்றாக எரியூட்டப்பட்டுள்ளது.
மோதலில் ஈடுபட்டவர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
0 comments:
Post a Comment