ஜேர்மனியில் நடக்கும் உலக கோப்பை குத்துச்சண்டை தொடரின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாக் ஷி, பாசுமட்டரி முன்னேறினர்.
ஜேர்மனியின் கலாக்னே நகரில் உலக கோப்பை குத்துச்சண்டை தொடர் நடந்து வருகிறது. 21 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில் 17 பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.
பெண்கள் 57 கி.கி., எடைப்பிரிவு அரையிறுதியில் 18 வயது வீராங்கனை இந்தியாவின் சாக் ஷி, தாய்லாந்தின் பிரீதாகாமோனை சந்தித்தார்.
சிறப்பாக செயல்பட்ட சாக் ஷி, 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதில் 2018 இல் கொமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற அயர்லாந்தின் மிக்கேலா வேல்சை எதிர்கொள்கிறார்.
பெண்கள் 64 கி.கி., எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிவிலாவோ பாசுமட்டரி, டென்மார்க்கின் அயாஜா தித்தீயை, கடும் சவாலுக்குப் பின் வீழ்த்தி, பைனலுக்கு சென்றார். இதில் சீனாவின் சென்குவை சந்திக்கிறார்.
பிங்கி வெண்கலம்
பெண்கள் 51 கி.கி., எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிங்கி ராணி, அயர்லாந்தின் கார்லியிடம் 0–5 என வீழ்ந்து வெண்கலம் கைப்பற்றினார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் பர்வீன் (60 கி.கி.,), இங்கிலாந்தின் மர்னேயிடம் வீழ்ந்து, வெண்கலம் வென்றார்.
0 comments:
Post a Comment