மன்னார் மனித புதைகுழியில் அடையாளமிடப்பட்டு அகழ்வு செய்யப்படவிருந்த மனித எச்சங்கள் முற்று முழுதாக அகழ்வு செய்யப்பட்டுள்ளன.
கடந்த வருடம் மார்ச் மாதம் மன்னார் நகர் நுழைவாயில் பகுதியில் சதொச விற்பனை நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது குறித்த மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
156 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்களுக்கான அகழ்வுப் பணியில் 342 எலும்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மாதிரி எலும்புக்கூடுகள் அமெரிக்க புளோரீடாவுக்கு காபன் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் பரிசோதனை முடிவுகளும் வெளியாகின.
புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட தடயப் பொருள்கள் மற்றும் மண் பரிசோதனைகள் போன்றவைகளும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருப்பதால் அதுவரைக்கும் மூன்று மாதங்களுக்கு அகழ்வுப் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய அகழ்வு செய்வதற்காக அடையாளமிடப்பட்டிருந்த எலும்புக்கூடுகள் யாவும் வெளியேற்றப்பட்டுள்ளன. தற்பொழுது புதைகுழி வெறுமையாக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment