வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் சாரதிகள் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலமையில் வவுனியா நகரசபை வீதியில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சுமார் இரு மணிநேரத்தில் மாத்திரம் இருபதுக்கு அதிகமான சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் பத்துக்கு மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
தலைக்கவசம் சீராக அணியாமை , சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை , அதிக சத்தம் ஓன் போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டது. என்று தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment