இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என அறிவிக்கப்பட்டு, பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டிப் பகுதியில் வைத்தே மொஹமட் சாதிக் அப்துல் ஹக், மொஹமட் ஷாஹித் அப்துல் ஹக் ஆகிய இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து, அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேரை தேடப்படும் நபர்களாக பொலிஸார் அறிவித்தது.
அவர்கள் தொடர்பான விபரங்களையும் புகைப்படம் சகிதம் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment