நெல் களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை

நெல் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தும் செயற்பாடுகள் நாளை முதல் ஒரு மாத காலத்துக்கு விரிவாக முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விடயம் தொடர்பில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவிக்கையில்,

இந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெற்தொகைகள் உரிய முறையில் களஞ்சியப்படுத்தப்படும். இவற்றைக் களஞ்சியப்படுத்தவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 5 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அம்பாறையில் ஆகக்கூடுதலான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் நெல் களஞ்சியசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment