அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிப்புச் சம்பவங்களையடுத்து, அம்பகுதி மக்கள் பள்ளிவாசல்களில் தஞ்சம் கோரியுள்ளனர்.
குறித்த பகுதிகளில் இடம்பெற்ற இந்த தாக்கதல்களில் 15 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் 6 சடலங்கள் தற்கொலைக் குண்டுதாரிகளின் உடல்களாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில், வெடிப்புச் சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்துக்கு அருகே வசித்த மக்கள், தமது வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தற்போது அப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.
இதேவேளை,பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment