முத்துகுமரன் இயக்கத்தில், எமதர்மராஜாவாக ஜோகிபாபு நடிக்கும் படம் தர்மபிரபு.
இதில், ஜனனி அய்யர், ராதாரவி, ரமேஷ் திலக், போஸ் வெங்கட், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
மேக்னா நாயுடு ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்க, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் படப்பிடிப்புகள் ஏவிஎம் ஸ்டூடியோவில் எமதர்மராஜனின் அரண்மணை செட் போடப்பட்டு அதில் நடந்து வருகிறது. இதில் எமனின் அம்மாவாக ரேகா நடிக்கிறார்.
இருவரும் இணைந்து நடிக்கும் காமெடி மற்றும் சென்ட்டிமென்ட் காட்சிகள் படமாகி வருகிறது. அம்மா மகனுக்கு இடையிலான இந்தக் காட்சிகள் படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள்.
0 comments:
Post a Comment