முதல் போட்டியில் முன்னேறியது மும்பை

சென்னை அணிக்கெதிரான முதல் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 15 ஆவது லீக் போட்டியானது நேற்றிரவு 8.00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்   மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.



நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 59 ஓட்டங்களை எடுத்தார்.

சென்னை அணி சார்பில் வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், மோகித் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.


அடுத்து துடுப்பெடுத்தாடிய  சென்னை அணியின் ஆரம்ப ஆட்டக்காரர்கள் வந்த வேகத்திற்கு நடையை கட்டியதால், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 

 மும்பை அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 58 ஓட்டங்களை குவித்திருந்தார்.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment