நகைகள் சுற்றி வைக்கப்பட்டிருந்த செய்திதாள்களை பெண்ணொருவர் விற்பனை செய்த சம்பவம் ஒன்று கேரளாவில் நடந்துள்ளது.
கேரளாவின் Karakkamandapam-ல் இருக்கும் Pottavila பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய வீட்டிலிருந்த பழைய செய்தித்தாள்களை விற்க முடிவு செய்துள்ளார்.
இதன் படி அவருடைய வீட்டுக்கு வந்த பழைய செய்தித்தாள்களை வாங்கும் நபரிடம் விற்பனை செய்துள்ளார்.
சிறிது நேரத்தில் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்தப் பழைய செய்தித்தாள்களை வாங்கிய நபரைப் பிடிப்பதற்காகத் தன் மகளுடன் அவரைத் தேடியுள்ளார்.
அதன் பின் அவர் கடை வைத்திருக்கும் Attakulangara பகுதிக்குச் சென்று தான் விற்ற பழைய செய்திதாள்களின் உள்ளே நகைகள் இருப்பதைக் கூறியுள்ளார்.
ஆனால் குறித்த நபரோ அப்படி எதுவும் இல்லை என்று மறுக்கவே, உடனே அந்த பெண் பொலிஸாருக்கு இது குறித்துத் தகவல் தெரிவித்துள்ளார்.
குறித்த நபரைப் பிடித்து பொலிஸார் விசாரித்தபோதும், அவர் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரது கடையில் சோதனை செய்த போது, 17 சவரன் நகைகள் இருந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரைக் கைது செய்த பொலிஸார் மீதம் உள்ள 20 சவரன் நகைகள் எங்கே என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து, வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் எனவும், அவர் தற்போது கேரளாவின் Karimadom பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment