தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள பலரும் பல்வேறு அரசியல் கட்சிகளில் சேர்ந்துள்ளனர். பலரும் அவர்களது கட்சிகளுக்காகப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் அனகானி பிரசாத்துக்கு சமந்தா சைக்கிள் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுள்ளார்.
இதனால் அவருடைய இரசிகர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சமந்தா தெரிவித்ததாவது, “அவர் குடும்ப நண்பர். என்னுடைய தனிப்பட்ட ஆதரவை அவருக்குத் தெரிக்கிறேன். ஐதராபாத்திற்கு வந்த நாள்களிலிருந்தே அவரையும் அவருடைய சகோதரியையும் எனக்கு நன்றாகத் தெரியும். அவர் ஒரு நல்ல மனிதர், அதனால் அவருக்கே ஆதரவு தருகிறேன்,” எனக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment