தைவானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அதன் தலைநகர் தைபே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன.
இதனால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
ஹுயாலியன் நகரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பூமிக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சேத விவரங்கள் வெளியாகவில்லை.
0 comments:
Post a Comment