முல்லைத்தீவு, பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவப் பொலிஸ் அலுவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவிலிருந்து முள்ளியவளை நோக்கிச் சென்ற கன்ரர் ரக வாகனம் ஒன்று வற்றாப்பளையிலிருந்து வந்த உந்துருளியுடன் ஏற்படவிருந்த விபத்தைத் தவிர்க்க முயன்றது.
இதன்போது, வீதியை விட்டு விலகி வீதியோரம் கடமையில் இருந்த இராணுவப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகின்றது.
அம்பாறையைச் சேர்ந்த எஸ்.பத்திரண (வயது-22) என்பவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை பொலனறுவையைச் சேர்ந்த திசாநாயக்க (வயது-32) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி முள்ளியவளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment