மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு

உலக கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது, அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30 ஆம் திகதி  தொடங்குகிறது.

இந்தப் போட்டிக்கான அணிகளின் பட்டியலை ஏப்ரல் 23 ஆம் திகதிக்குள்  சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) காலக்கெடு விதித்திருந்தது. 

இதன்படி நேற்று முன்தினம் கடைசி அணியாக வீரர்களின் பட்டியலை ஐ.சி.சி.யிடம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கொடுத்தது.

ஜாசன் ஹோல்டர் (Jason Holder ) தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில்  சில முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

குறிப்பாக பிராவோ, சமி, பொலார்ட் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் ஐ.பி.எல் தொடரில் கலக்கி வரும் கிறிஸ் கெயில் மற்றும் ரசல் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பாபியன் ஆலென், டேரன் பிராவோ, கார்லஸ் பிராத்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், ஷனோன் கேப்ரியல், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், ஷாய் ஹோப், இவின் லீவிஸ், ஆஷ்லே நர்ஸ், நிகோலஸ் பூரன், கெமார் ரோச், ஆந்த்ரே ரஸ்செல், ஒஷானே தாமஸ் ஆகியோரே அணியில் இடம்பெற்றுள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment