ராட்சத கிரேன் ஒன்று சரிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவின், வோஷிங்டனில் சியாட்டில் நகரில் நடந்துள்ளது.
குறித்த பகுதியில், கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேனே சரிந்து வீழ்ந்துள்ளது.
வீதியில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது கிரேன் வீழ்ந்ததில் காரில் பயணித்த இருவரும், மற்றுமோர் காரிலிருந்த இருவரும் உட்பட நால்வர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் மேலும் படுகாயமடைந்த எண்மர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 comments:
Post a Comment