சவூதி அரேபியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் அம்பாறை மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முகம்மட் ரிஹாஸ் உவைஸ் என்ற இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை மருதமுனையைச் சேர்ந்த மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சவூதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் விடுமுறை நாள் என்பதால் உணவு உண்பதற்காக இவர்கள் மூவரும் சவூதி அதிவேகப் பாதை வழியே சென்று கொண்டிருந்தனர். இதன்போது, பின்னால் வந்த கார் இவர்கள் சென்ற வாகனத்துடன் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒருவர் சம்பவ இடத்தில் மரணித்துள்ளார். ஏனைய இருவரில் ஒருவரின் கால் ஒன்று அகற்றப்பட்டுள்ளது எனவும், மற்றையவர் கோமா நிலையில் இருக்கின்றார் எனவும் தெரியவருகின்றது.
விபத்து தொடர்பில் சவூதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, வருகின்றனர்.
0 comments:
Post a Comment