அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களுக்கே அதிகளவான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படுவதாக பலர் முறையிட்டுள்ளனர். உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை அவர்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு மன்னார் நகர சபை முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.
விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
வீட்டுத்திட்டதம்கோரிவரும் மக்களை நாளாந்தம் மன்னார் பிரதேச செயலகம், மன்னார் நகர சபை என அலைய விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
குறித்த வீட்டுத்திட்டத்தை தீர்மானிப்பது மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையா அல்லது ஆளும் கட்சி அரசியல்வாதிகளா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சம்மந்தமே இல்லாத அரசியல் வாதிகள் மக்களை கூட்டிச் சென்று பிரதேசச் செயலரை அழைத்து வீட்டுத்திட்டம் வழங்குகின்ற நிலையே தற்போது காணப்படுகின்றது.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய முறையில் குறித்த வேலைத்திட்டத்ததை முன்னெடுக்க வேண்டும்.
உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் போய்ச் சேரவில்லை.பாதிக்கப்பட்ட மக்கள் என்னிடம் பல முறை முறையிட்டுள்ளனர்.
விடையம் தொடர்பில் நான் பல தடவை மன்னார் உதவி பிரதேச செயலன் கவனத்திற்கு கொண்டு சென்றும் இது வரை உரிய தீர்வு மன்னார் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படவில்லை.
குறித்த செயற்பாடுகளை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
இதன் பின்புலத்தில் அரசியல் வாதிகளும் இருக்கின்றார்களா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவ்விடையம் தொடர்பாக மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். ”அழையா விருந்தாளிகளாக சில அரசியல் பிரதி நிதிகள் கலந்து கொள்ளுவதாக” அவர் தெரிவித்தார்.
தமது எதிர்கால பதவியைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்காக அரசியல் புன்புலத்தினுடாக,அரசியல் சிபாரிசினூடாக வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.
பக்கச்சார்புடன் குறித்த வீட்டுத்திட்டம் வழங்கப்படுகின்றது. வீட்டுத்திட்டங்களை இடை நிறுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எதிர் காலத்தில் இவ்விடையங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும். மன்னார் உதவி பிரதேச செயலரின் குறித்த செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். என்றார்.
0 comments:
Post a Comment