பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சற்றுமுன்னர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்பேற்று பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவையும்
தமது பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ நேற்று பதவி விலகினார். தொடர்ந்து, பொலிஸ்மா அதிபரும் இன்று பதவி விலகினார்
புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை உரிய வகையில் பயன்படுத்தி, இழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமை காரணமாக ஜனாதிபதியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment