மருத்துவர் என்ற போர்வையுடன் பலரை ஏமாற்றிய வழக்கில் பிரித்தானியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பெண் ஒருவரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் Coventry நகரை சேர்ந்தவர் கமலேஷ் பஷி (58). இவர் தன்னை ஒரு கைதேர்ந்த மருத்துவராக தன்னைக் காட்டிக்கொண்டு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
தான் ஒரு தகுதிவாய்ந்த மருத்துவர், செவிலியர், தொழில்முறை சிகிச்சையாளர், பிசியோதெரபிஸ்ட் என கூறி பலரை ஏமாற்றி வந்துள்ளார்.
குறிப்பாக வயதான நோயாளிகளையே பஷி குறிவைத்து மோசடி செய்து வந்தார். தன்னை மருத்துவ நிபுணராக அவர்கள் ஏற்கவேண்டும் என தூண்டியுள்ளார்.
நோயாளிகளின் பிரச்சனை குறித்து அறியாமலேயே விசேட மருந்துகளையும் கொடுத்து வந்துள்ளார்.
இவரின் இந்த ஏமாற்று வேலை வெளியில் தெரியவந்த நிலையில் பொலிஸார் அவரைக் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நோயாளிகளிடமிருந்து மோசடி செய்து பணத்தைப் பெறவே பஷி இப்படியான விடயத்தை முன்னெடுத்துள்ளார்.
குறிப்பாக, பஷி கொடுத்த மருந்துகளைச் சாப்பிட்ட நோயாளிகள் ஆபத்தான விளைவுகளை சந்தித்திருக்கலாம் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
அவர் மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பஷிக்கு கொடுக்கப்படும் தண்டனை விபரங்கள் வரும் மே மாதம் 5ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
0 comments:
Post a Comment