கோலி தலைமையிலான பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி, மொகாலியில் வைத்து அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
ஐ.பி.எல். 12 தொடரின் 28 போட்டி மொகாலியிலுள்ள பிந்ரா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதுவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 போட்டிகளிலும், பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 10 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
இந்த நிலையில், 7 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் அணி உள்ளூரில் வலுவாகக் காணப்படுகிறது.
அந்த ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட பஞ்சாப் அணியினர் தீவிர முனைப்பு காட்டுவார்கள். கடந்த ஆட்டத்தின் போது அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் முதுகுவலியால் அவதிப்பட்டார். அதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடுவது சந்தேகம் தான்.
5 நாள் ஓய்வுக்கு பிறகு கோலி படையினர் இறங்குவதால் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment