யாழ்.சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான வழக்கில் நொதேர்ன் பவர் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத்தெகையாக 20 மில்லியன் ரூபா வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சூழல் மற்றும் இயற்கை ஆய்வு நிலையத்தின் சார்பில் பேராசிரியர் ரவீந்திர காரியவசத்தால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு நேற்றுத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நொதேர்ன் பவர் நிறுவனத்தின் செயல்பாட்டால், கிணறுகளில் எண்ணெய் மற்றும் கிரீஸ் கலப்பதால், குடி தண்ணீர் மாசடைவதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பிரதேசவாசிகள் 500 பேருக்கு 20 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டுமெனத் தீர்ப்பளித்தது.
0 comments:
Post a Comment