ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் பலர் காயமடைந்திருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மெல்போர்ன் நகர், சாப்பல் ஸ்ட்ரீட் மற்றும் மாவெர்ன் சாலைப்பகுதி அருகே உள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்கு வெளியில், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் விடுதியில் காவலாளியாக பணிபுரிந்து வரும் ஒருவரின் முகத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாகவும், மற்றொருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெல்போர்ன் ஆல்ஃபிரட் மருத்துவமனையில் 28 வயதான மனிதர் மற்றும் இன்னும் அடையாளம் காணப்படாத மற்றொருவர் சிக்கலான நிலையில் தங்கள் உயிருக்கு போராடுவதாகவும் கூறப்படுகிறது.
29 மற்றும் 50 வயதுடைய இருவர் இலேசான காயங்களுடன் நல்ல நிலைமையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் பொதுமக்கள் பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என விக்டோரியா பொலிஸ் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்ததிலிருந்து அப்பகுதியின் நிலை குறித்து பொலிஸார் எந்த தகவலும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் சில உள்ளூர் ஊடகங்கள் 4 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றன.
திருடப்பட்ட Porsche Cayenne காரில் வந்தபடியே மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment