வானத்தில் ஒளி வடிவில் விளம்பர பலகை வைக்க திட்டமிட்டுள்ளது ரஷ்யாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று.
இந்த நிறுவனம் சிறிய ரக செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி வானத்தில் விளம்பர பலகையாக வைக்கத் திட்டமிட்டுள்ளது.
க்யூட்சீட்ஸ் எனப்படும் சிறிய ரக செயற்கைக் கோள்கள், பூமியிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும். அந்த செயற்கைக் கோள்கள் சூரிய ஒளியின் அடிப்படையில் செயல்படும்.
இரவு நேரத்தில் பிரமாண்ட வெளிச்சத்தில் விளம்பரங்களை அந்த செயற்கைகோள்கள் ஒளிப்பரப்பும்.
ஸ்டார் ராக்கெட் நிறுவனத்தை சேர்ந்த விளாடிலென் சிட்னிகோவ் என்பவர் இந்தத் திட்டத்தை வடிவமைத்துள்ளார். ஆனால் இந்த திட்டத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். செயற்கைக் கோள்கள் ஒளி மாசை ஏற்படுத்தி, நட்சத்திரங்களின் ஒளியை குறைத்துவிடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
0 comments:
Post a Comment