மடுவுக்குப் போனார் மகேஸ் சேனாநாயக்க

மன்னார் மடு அன்னை தேவாலையத்திற்கு இராணுவக் கட்டளைத்தளபதி  ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க பயணம் செய்துள்ளார்.

இவரின் பயணத்தின்போது, மன்னார் மறைமாவட்ட ஆயர்,மற்றும் குருக்கள் இணைந்து  சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இறையாசீர் வழங்கப்பட்டது.


குறிப்பாக மடு அன்னையின் திருச்சொரூபம் ஒன்றும் இதன்போது அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 

அன்னையின் திருச்சொரூபம் வைப்பதற்கான  கட்டடத்தை மன்னார் மறைமாவட்ட  ஆயர் ஆசீர்வதிக்க இராணுவக் கட்டளைத் தளபதியால்  திரைநீக்கம் செய்யப்பட்டு அன்னையின் திருச்சொரூபம் அதிலே வைக்கப்பட்டது. 

இராணுவத் தளபதியின் வருகையின் நினைவாக ஆலயத்தின் முன்பகுதியில் மகேஸ் சேனநாயக்கவால் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.


இந்த நிகழ்வில் வன்னி இராணுவக் கட்டளைத்தளபதி, இராணுவ அதிகாரிகள், குருக்கள், கன்னியர்கள், இறைமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் இறையாசீரையும் பெற்றுச்சென்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment