அஜித் வாக்களிக்கச் சென்றிருந்தபோது அவரைத் தாக்குவது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதை விஜய் ரசிகர்கள் தற்போது “#ஓட்பூத்தில்செமகாட்டு” என்ற மோசமான வார்த்தை கொண்ட ஹேஷ்டேக் ஒன்றுடன் டிரென்டிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்திய நாடாளுமன்றுக்கான தேர்தல் வாக்குப் பதிவு தமிழ்நாட்டில் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றது. அதில் பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
இதன்போது, நடிகர் விஜய் வரிசையில் நின்று பொறுமையாக ஓட்டளித்ததும், அவரிடம் செல்பி எடுக்க வந்தவர்களிடம் எடுத்துக் கொண்டதும் வைரலாகப் பரவியது.
இதேவேளை வாக்களிக்கச் சென்ற அஜித்தைப் பார்க்க கடும் கூட்டம் கூடியது. கஷ்டப்பட்டே அவர் வாக்களித்துவிட்டுத் திரும்பினார்.
இந்த நிலையில் தற்போது அஜித் வாக்களித்த போது அவரை யாரோ தலையில் அடிக்கும் வீடியோவும், அஜித், ஷாலினி வரிசையில் நின்று வாக்களிக்காததால் இரு பெண்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
0 comments:
Post a Comment