இந்தியாவின் தமிழகத் தேர்தல் தற்போது 17 ஆவது மக்களவைத் தேர்தல் தற்போது இடம்பெற்று வருகிறது.
இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் சுயமாக சிந்திக்கும் வகையில் குணமடைந்த 159 பேரும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
அதற்காக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பற்றி எடுத்துச் சொல்லி, வாக்களிப்பதற்கு இரு நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் தங்களது வாக்குகளை செலுத்த வசதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதன் முறை.
இனி அடுத்து வரும் தேர்தல்களில் இதுபோன்ற வாக்குச்சாவடிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment