யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் வரும் பொதுமக்கள் கைப்பை (Hand Bag) உள்ளிட்ட பொதிகளை எடுத்துவருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என நீதிமன்றப் பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து நாடுமுழுவதுமுள்ள அரச நிறுவனங்கள், வைத்தியசாலைகள் மற்றும் வங்கிகளில் பொதிகளை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த்து.
இந்த நிலையில் யாழ்.நீதிமன்ற வளாகத்துக்குள் இந்த நடைமுறையை பொலிஸார் பின்பற்றத் தவறியதால் நீதிமன்ற வழக்குக்கு வருகை தந்த ஒருவர் தான் எடுத்துவந்த கைப்பையை நீதிமன்ற வாயிலின் உள்புறத்தில் வைத்துவிட்டு உள்ளே வந்துள்ளார்.
இதனால் நீதிமன்ற வளாகத்துக்குள் குழப்பநிலை ஏற்பட்டது. எனினும் கைப்பையை எடுத்து வந்தவர் பொலிஸாரிடம் தகுந்த காரணத்தைக் கூறியதால் அவரிடம் கைப்பை வழங்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தையடுத்தே யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் கைப்பை உள்ளிட்ட பொதிகளை எடுத்துவர பொதுமக்கள் அனுமதிக்கப்படார் என்று நீதிமன்றப் பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment