இடி, மின்னலுடன் கூடிய நேரத்தில் பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வெட்டவெளியில் அல்லது மரத்தின் கீழ் நிற்க வேண்டாம். பாதுகாப்பான கட்டடங்கள் அல்லது மூடிய நிலையில் உள்ள வாகனங்களில் இருக்கவும்.
வயல்கள் தோட்டங்கள் விளையாட்டு மைதானங்கள் மற்றும் நீர் நிலைகள் போன்ற திறந்த இடங்களில் இருப்பதைத் தவிருங்கள்.
கம்பி இணைப்புடனான தொலைபேசிகள் , கையடக்க தொலைபேசிகள் மற்றும் தொலைகாட்சி , வானொலி உள்ளிட்ட மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்ட மின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம்.
மின்னலின் போது தஞ்சம் அடைய அருகில் ஏதும் இல்லாத பட்சத்தில் மின் கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி, வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்வு செய்து அங்கு தஞ்சமடையலாம். அதே போல் திறந்த நிலையில் இருக்கும் ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்க வேண்டாம்.
துவிச்சக்கர வண்டி, உழவு இயந்திரம், படகு போன்ற திறந்த நிலையில் உள்ள வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்.
அவசர நிலையின் போது, குறித்த பிரதேசத்தின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரியின் உதவியை நாடுங்கள் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment