காதல் விவகாரத்தால் இளைஞர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் வாள்வெட்டில் முடிந்துள்ளது.
இதன்போது வெட்டுக்காயங்களுக்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் திருகோணமலை, வில்லூன்றி பகுதியில் இன்று காலை நடந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த தங்கத்துரை தனுஸ்டன்என்பவரே சாவடைந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதி ஒருவரை இருவர் காதலித்ததன் காரணமாகவே கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்படும் காணொளி அப்பகுதியில் உள்ள சிசிரிவியில் பதிவாகியுள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளைத் தாம் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment