வட கொரியா-ரஷ்யா ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு

வட கொரிய ஜனாதிபதி கிங்யொங் உன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்றையதினம் இடம்பெறவுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியை முதல் முறையாக நேரில் சந்தித்துப் பேச்சு  நடத்த,  ரஷ்யாவின் விளாதிவோஸ்டாக் நகரை நேற்று  சென்றடைந்தார் வட கொரிய ஜனாதிபதி.

இரகசியமாக வைக்கப்பட்டிருந்த அவரது பயணத் திட்டம்  தொடர்பிலான தகவலை, அவர் பிரத்யேக ரயில் மூலம் ரஷ்யா புறப்படுவதற்கு முன்னர் வட கொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டது.

அந்த ரயிலில் கிம் யொங்-உன்னுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ரீ யாங்-ஹோ உள்ளிட்ட குழுவினர் ரஷ்யா சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, டியூமென் நதியைக் கடந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த கிம் யொங்-உன்னின் பிரத்யேக தொடருந்து, எல்லை நகரான காசனில் நிறுத்தப்பட்டு, அங்கு கிம் யொங்-உன்னுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து, விளாதிவோஸ்டாக் நகரை வந்தடைந்த கிம் யொங் உன், அங்கு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

இதன்போது இந்த ரஷ்ய சுற்றுப் பயணம் மிகச் சிறப்பான வெற்றியைப் பெறும் என்று நம்புவதாகவும், வட கொரியா - ரஷ்யா இடையிலான உறவை மேம்படுத்துவது தொடர்பில் முக்கியத்துவம் கொடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார். 




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment