துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக மாறியவர் கார்த்திக் நரேன்.
அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன் நடிப்பில் நரகாசூரன் படத்தையும் இவரே இயக்கினார். படம் முடிந்துவிட்ட நிலையில் சில பிரச்சனைகளால் படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.
இதனால் அடுத்து அறிவிக்கப்பட்ட நாடகமேடை படமும் கிடப்பில் இருக்கிறது. இந்த நிலையில் கார்த்திக் நரேன், நடிகராக உருவெடுத்துள்ளார்.
சந்தீப் கிஷன் தெலுங்கு மற்றும் தமிழில் நடிக்கும் இருமொழி படத்தில் கார்த்திக் நரேனும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தமிழில் உருவாகும் படத்திற்கு கண்ணாடி என்றும், தெலுங்கில் உருவாகும் படத்திற்கு நின்னு வீடனி நீடனு நேனே என்றும் பெயரிட்டுள்ளனர். கார்த்திக் ராஜூ என்பவர் இயக்குகிறார்.
0 comments:
Post a Comment