நஷ்டத்திலிருந்து மீள்வதற்காக அதிகமான வெளிப் படங்களில் நடித்து வரும் தயாரிப்பாளர் சசிகுமார் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்.
பாலாவை வைத்து தாரை தப்பட்டை படத்தை சசிக்குமார் தயாரித்திருந்தார். இதன்போதே இவருக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ரஜினி நடித்த 'பேட்ட' படத்தில் சிறு வேடத்தில் நடித்த சசிக்குமார், இப்போது எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் 'கொம்பு வச்ச சிங்கமடா', சமுத்திரக்கனி இயக்கத்தில் 'நாடோடிகள்-2', சுசீந்திரன் இயக்கும் 'கென்னடி கிளப்' மற்றும் சுந்திர் சியின் உதவியாளர் இயக்கும் புதிய படம் என ஏகப்பபட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்தப் படங்களுடன் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷின் அண்ணனாக நடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் நிலையில் அடுத்து, விஜய் ஆண்டனி நடித்த 'சலீம்' படத்தை இயக்கிய, நிர்மல் குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சசிக்குமார்.
வைத்து சதுரங்க வேட்டை - 2 படத்தை இயக்கினார் நிர்மல்குமார். அப்படத்தின் தயாரிப்பாளர் மனோபாலாவுக்கும் அரவிந்த்சாமிக்கும் இடையிலான பிரச்சனையினால் சதுரங்கவேட் 2 படம் முடங்கிக் கிடக்கிறது.
இனியும் அந்தப்படத்தை நம்பிக்கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால் சசிகுமாருக்கு கதை சொல்லி ஓகே பண்ணியதோடு, அதே வேகத்தில் தயாரிப்பாளரையும் பிடித்துவிட்டார்.
0 comments:
Post a Comment