ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றது.
டோஹாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் ஒரு பகுதியாக மகளிர் ஹெப்டதலான் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் 5993 புள்ளிகளை எடுத்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
கடந்த 2017 போட்டியில் ஸ்வப்னா தங்கம் வென்றிருந்தார். ஜகார்த்தா ஆசிய போட்டியில் 6026 புள்ளிகளுடன் தங்கம் வென்றார்.
மகளிர் 4 இல் 400 மீ கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, விகே.விஸ்மயா, ஆரோக்கிய ராஜிவ் ஆகியோர் கொண்ட இந்திய அணி 3 நிமிடம் 16.47 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 2 தங்கம், தலா 5 வெள்ளி, வெண்கலத்துடன் உள்ளது இந்தியா.
0 comments:
Post a Comment