அம்பாறை, பகுதியில் தற்போது பெரும் பதற்றம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் பொலிஸாரும், படையினரும் இணைந்து இன்று மாலை விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது ஒருவரை கைதுசெய்ய முற்பட்டவேளை, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன்போது, படையினருக்கும் இனந்தெரியாத குழுவுக்குமிடையில் மோதல் இடம்பெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சாய்ந்தமருது பகுதியில் பொலிஸார், படையினரை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ள தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
0 comments:
Post a Comment