மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய பலாலிப் பொலிஸார் வீதியில் வீழ்ந்து படுகாயமடைந்த சம்பவம் ஒன்று சுன்னாகம் பகுதியில் நடந்துள்ளது.
படுகாயமடைந்த பொலிஸார் தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுடனும் குறித்த பொலிஸார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்று மருத்துவமனை வட்டாரத்தால் தெரிவிக்கப்பட்டது.
சுன்னாகம் பகுதிநோக்கி மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பொலிஸாரும் வீதியால் பயணித்த பெண் ஆசிரியர் ஒருவரை மோதித்தள்ளினர்.
இதன்போது வீழ்ந்த இரு பொலிஸாரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சமயம் இருவரும் போதையின் உச்சத்தில் மருத்துவமனையில் இருந்த அலுவலர்களுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். என்றும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment