இலங்கையர்கள் நால்வர் லண்டனில் அந்நாட்டுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லண்டன் லலூடன் விமான நிலையத்தில் வைத்தே இவர்கள் நால்வரும் பிரித்தானிய பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.
சர்வதேச விமானத்தின் மூலம் குறித்த நால்வரும் லண்டனின் லூடன் விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை இரவு வந்திறங்கிய நிலையில் அவர்கள் நால்வரும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பான சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும் பயங்கரவாதச் சட்டத்திற்கமைய தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என பிரித்தானிய பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பிரித்தானியாவின் பெட்போர்ஷெயார் பொலிஸ் நிலையத்தில் நால்வரும் தடுத்து வைக்கப்பட்டு ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment