யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதி இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாவாந்துறை, ஐந்து சந்தி பகுதிகளில் இராணுவம், மற்றும் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பகுதிக்குள் செல்வதும், அங்கிருந்து வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சல்லடைபோட்டு தேடப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment