ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 ஒட்டங்களில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
12 ஆவது ஐபிஎல் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8.00 மணிக்கு இடம்பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய சென்னை அணி முதலாவதாக துடுப்பெடுத்தாடியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை எடுத்தது சென்னை அணி.
பதிலுக்கு 176 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 8 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
0 comments:
Post a Comment