சட்டவிரோதமான முறையில் டுபாயிலிருந்து ஒரு தொகை சிகரெட்டுக்களை நாட்டுக்கு கொண்டுவர முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர்.
சுமார் 41 இலட்சத்து 69 ஆயிரம் ரூபா பெறுமதியான, 83 ஆயிரத்து 380 சிகரெட்டுக்களை குறித்த இரு சந்தேக நபர்களின் பயணப் பொதியிலிருந்து மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment