வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாக மானிப்பாயில் 8 பேர் பொலிஸாரால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 வாள்கள், இரு உந்துருளிகள், சுழியோடிகள் பயன்படுத்தும் முகக் கண்ணாடிகள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மானிப்பாயில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்களையடுத்து வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்ணான்டோ கவனம் எடுத்திருந்தார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளு முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக நேற்றுச் சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் அலைபேசிகளிலிருந்து வாள்களுடன் பல பேரின் ஒளிப்படங்களும், பெயர்கள் பொறிக்கப்பட்ட வாள்களின் ஒளிப்படங்களும் கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ள பொலிஸார் அவற்றின் அடிப்படையிலும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்கின்றனர்.
விக்ரர் என்ற நபரின் பெயர் பொறிக்கப்பட்ட வாள்களின் ஒளிப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்த பொலிஸார், ஒளிப்படங்களை ஆதாரமாகக் கொண்டு இன்னும் பலர் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்தக் குழுவின் பிரதான நபர் என்று கருதப்படும் கைதடியைச் சேர்ந்த ஒருவரும் தேடப்பட்டு வருகின்றார். இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டனர்.
பொலிஸார் எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்ணான்டோ ஆலோசனைகளை வழங்கினார். சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்வதற்கான பணிப்புரைகளையும் பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
0 comments:
Post a Comment