'பேட்ட' படத்தில் இடம் பெற்ற 'மரண மாஸ்' பாடலும் 5 கோடி பார்வைகளைக் கடந்து அனிருத்தின் 5 கோடி கிளப்பில் சேர்ந்துள்ளது.
அனிருத் இசையில் பல கோடி பார்வைகளைத் தொட்ட பாடல்களில் இந்தப் பாடலும் சேர்ந்துள்ளது.
அனிருத் இசையில் 'ஒய் திஸ் கொலவெறி' 5 கோடி சாதனையைப் படைக்க, அந்த சாதனை தற்போது யுவன் இசையில் வெளிவந்த 'ரௌடி பேபி' பாடல் மூலம் முறியடிக்கப்பட்டாலும் யு டியூபின் பலனை அதிகம் அனுபவித்தது அனிருத்தாகத்தான் இருக்கும்.
அவரது இசையில் வெளிவந்த 'மாரி' படத்தின் 'டானு டானு...' பாடலும், 'வேதாளம்' படத்தின் 'ஆலுமா டோலுமா' பாடலும், 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் 'சொடக்கு மேல...' பாடலும் ஏற்கெனவே 5 கோடி பார்வைகளைக் கடந்த பாடல்களாக யு டியுபில் இருக்கின்றன. இப்போது அடுத்த பாடலாக வலம் வருகிறது மரண மாஸ்.
ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு முதல் முறையாக இசையமைத்த அனிருத் அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் ஹிட்டாக்கியிருந்தார். அதில் இந்த 'மரண மாஸ்' பாடல் மட்டும் சூப்பர் ஹிட்டான பாடலாக அமைந்தது.
0 comments:
Post a Comment