முன்பதிவில் 40 கோடி வசூல் 'அவெஞ்சர்ஸ்'

தமிழ்நாட்டில் தற்போது வரையில் முன்பதிவு மூலமாக மட்டுமே 40 கோடி வசூலித்துள்ளது  'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படம்.

தமிழ்ப் படங்களுக்கான முன்பதிவில் கூட இப்படி வசூலித்திருக்குமா என்று 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்தை வாங்கி வெளியிடும் வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் ஆச்சரியப்படுவதைவிட அதிர்ச்சியடைந்திருப்பார்கள்.

அதிகாலை 4 மணிக்கு பல தியேட்டர்களில் காட்சிகள் ஆரம்பமாகின்றன.  சென்னையில் உள்ள இரண்டு ஐமேக்ஸ் தியேட்டர்களில், முறையே 330 மற்றும் 347 ரூபாய் டிக்கெட்டுகள் இருந்தாலும் அடுத்த ஒரு வாரத்திற்கு ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்தியாவில் அதிகபட்சமாக வசூல் செய்த ஹாலிவுட் படங்களின் வரிசையில் கடந்த வருடம் வெளிவந்த 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் முதலிடத்தில் உள்ளது. 

அந்த சாதனையை 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' முறியடித்து 300 கோடி வசூலித்து முதலிடத்தைப் பிடிக்கும் என்று இந்தியன் பாக்ஸ் ஆபீசில் எதிர்பார்க்கப்படுகிறது. 



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment