ஒய்.ஜி.மகேந்திரனின் 3 ஜி நாடகத்தைப் பாராட்டி ரஜினி வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒய்.ஜி.மகேந்திரனின் எல்லா நாடகங்களையும் நான் பார்த்து விடுவேன். சிரிக்க வைத்து, சிந்திக்க வைக்கிற நாடகமாக அவைகள் இருக்கும்.
சமீபத்தில்தான் அவரது 3ஜி நாடகம் பார்த்தேன். ஏதோ காமெடியாக 3ஜி, 4ஜி அப்படி ஏதோ சொல்லப்போகிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் சர்ப்ரைசாக பல விஷயங்கள் அதில் இருந்தது.
மகாத்மா காந்தியையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசையும் மேடைக்கு கொண்டு வந்து நிறுத்தியது அற்புதமாக இருந்தது. அருமையான கருத்துக்கள் கொண்டதாக இருந்தது. அவருக்கு நாடக உலகமே வாழ்த்து சொல்லணும், மக்கள் ஆதரவு தரணும். -என்றார்.
0 comments:
Post a Comment